Kadhal Solla Vandhen Movie Preview Kadhal Solla Vandhen Preview
Director Boopathy Pandian has proved that his forte is humor and has always satisfied his fans on this aspect. After Vishal’s Malaikottai, the director’s offering is Kaadhal Solla Vandein produced by Jayakumar and Meena Jayakumar for S3 films.
Pandian takes charge of story, screenplay and dialogues along with direction. As the name suggests, the film is said to center around romance. After having worked with established artists, Pandian enters the arena with newcomers in KSV.
Hero Balaji is not new to TV buffs as he has done an important role in the television serial Kana Kaanum Kaalangal. Heroine Meghna Sundar is the daughter of actor Sundar Raj and Pramila Joshi who featured in Thappu Thaalangal and Vaidegi Kaathirundal respectively. Technically, Meghna’s first film is Kavithalaya’s Krishna Leelai with Jeevan which is yet to be released. Meghna has already been spoken for her uncanny resemblance to Nayanthara.
While speaking about his film director Boopathy Pandian felt that he needed only newcomers for his film and that justifies his selection of a fairly all new cast. Pandian also assures that though KSV is romance based, humor would run through as its main course. KSV is said to tickle the funny bones of the audience and at the same time the climax sequence would stand out totally different and is sure to strike a chord with the audience. Song sequences have been picturised beautifully under Yuvan Shankar Raja’s music and Muthukumar and Sarathy’s lyrics.
ஒரு பையன் ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல முயற்சிப்பதே கதை. இதில் முதல் இயர் படிக்கும் மாணவனான ஹீரோவுக்கு, பைனல் இயர் படிக்கும் ஹிரோயின் மேல் காதல். மற்றபடி இம்மாதிரியான காதல் கதைகளில் பெரிசாக என்ன திரும்ப திரும்ப சொல்லிவிட முடியும் என்று கேட்பவர்களுக்கு கொஞ்சம் முடிஞ்சா முடியும்னு சொல்லியிருக்காங்க..
பாலாஜி ஒரு தச்சரின் மகன். பார்த்த மாத்திரத்திலேயே சஞ்சனாவை காதலிக்க ஆரம்பிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரெண்ட் ஆகிறார் பாலாஜி. அதுவும் எப்படி? சஞ்சனாவை காதலிக்க ஆசைப்படும் சீனியர் மாணவர்களுக்கு ஹெல்ப் செய்வதை போல தொடர்ந்து சஞ்சனாவுடன் பயணிக்கிறார். எப்படி பாலாஜி தன் காதலை சஞ்சனாவிடம் சொல்கிறார் அதை சஞ்சனா ஏற்றுக் கொண்டாரா..? என்பதுதான் கதை.
படம் முழுக்க முடிந்த வரை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள். ஹீரோயினை இம்பரஸ் செய்வதற்காக சீனியர் மாணவரிடம் அரசு பேருந்து நீ ஏறியவுடன் அரசி பேருந்து என்றெல்லாம் கவிதை எழுதி கொடுப்பது. நாயை கொஞ்சினாள் என்பதற்காக அந்த நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து இலையில் சோறு போட்டு ஊட்டுவதும், அவள் தன்னை விட ரெண்டு வயது பெரியவள் என்றதும், நாயை கல்லை எடுத்து அடித்து துரத்துவதும், காதலை பற்றி ஏதோ சொல்லும் போது விஜய் ஒரு விக்ரமன் படத்தில் சொல்வது போல காதல் ஒரு முறை தான் வரும் என்பதை போல சீரியஸாய் பேசுவது என்று.. முதல் பாதி முழுக்க ஒரே கலகலப்பாய் தான் போகிறது.
சஞ்சனாவிடம் காதலை சொன்ன பிறகுதான் என்ன செய்வது என்று படத்தின் கேரக்டர்கள் குழம்புவதை போல திரைக்கதையும் போகும் வழி தெரியாமல் அலைகிறது. கொட்டாவி வர வைக்கிறது. தயாரிப்பாளருக்கு என்ன ப்ரச்சனையோ.. எதோ ஒரு வீட்டு பின் கட்டை எல்லாம் ரெண்டு வசனம் சொல்லி சீனை ஒப்பேத்த பின்பக்கமாய் நடந்து வந்து நின்று பேசிவிட்டு போவதெல்லாம் ரொம்பவே ஓவர்.. பாஸு இப்பல்லாம் சீரியலிலேயே இந்த மாதிரி எடுக்கிறதில்லை.
கனாகானும் காலங்கள் பையன் பாலாஜி தான் ஹீரோ.. மிக இயல்பாக செய்திருக்கிறார். பெரிதாய் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் உறுத்தாமல் இருக்கிறார். சஞ்சனா சில சூடியில் அர்புதமாய் இருக்கிறார். கொஞ்சம் வயதானவராக தெரிந்தாலும் கதை படி பாலாஜியை விட பெரிய பெண் என்பதால் சரியாக இருக்கிறது.படத்தின் மிக முக்கிய ப்ளஸ் பாயிண்ட் யுவனின் இசையும், பின்னணி இசையும் தான். ஸ்வீட். ஒளிப்பதிவு ஒன்றும் பெரிதாய் சொல்லிக் கொள்கிறார் போல இல்லை.
கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கியவர் பூபதி பாண்டியன். முதல் பாதி முழுவதும் கலகலப்பாக கொண்டு போகும் முயற்சியில் வெற்றிப் பெற்றிருக்கிறார். ரெண்டாவது பாதியில் தான் சம்பவங்கள் இல்லாமல் தொய்ந்து போய் விழுகிறது ஆங்காங்கே.. ஹீரோயின் தன் மேல் உள்ளது காதல் இல்லை என்று நிறுபிப்பதற்காக ஹீரோவை அழைத்துக் கொண்டு லாட்ஜுக்கு போவதெல்லாம் ஓவர். அதற்கு பாலாஜி சொல்லும் பதில் எல்லாம் தனுஷை ஞாபகப்படுத்தும் காட்சிகள். பட் ஒட்டல சார்.. மொத்ததில் இன்னும் கொஞ்சம் கிரிஸ்பாக நாடகத்தன்மை குறைத்து கவனித்திருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்குமோ..? அதே போல க்ளைமாக்ஸ் போன வார பாணா காத்தாடியைநினைவு படுத்துவதாகவும், மற்றும் சில காட்சிகள் சமீபத்திய வி.தா.வருவாயா? வை ஞாபகப்படுத்துவதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
காதல் சொல்ல வந்தேன்- டைம் பாஸ்..
No comments:
Post a Comment